Sunday 12 April 2015

7 கூரை வீடுகள் தீயில் எரிந்து சாம்பல் ரூ. 5 லட்சம் பொருட்கள் சேதம்





1




















திருவாரூரில் 7 கூரை வீடுகள் தீயில் எரிந்து சாம்பலாகின. இதில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

தீயில் எரிந்த கூரை வீடுகள்

திருவாரூர் நாலுகால் மண் டபம் பகுதி கூரை வீடுகள் நிறைந்த பகுதி. இப்பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 50). இவரும் கூரை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று மதியம் இவருடைய கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ பிளம்பு பறந்து சென்று அருகே இருந்த வைரம் (70), சுமதி(45) ஆகிய 2 பேரின் கூரை வீடுகளிலும் தீப்பிடித்து கொண்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தீயணைப்பு துறை யினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். அப்பகுதி பொதுமக்களும் வாளிகளில் தண்ணீர் நிரப்பி, வீடு கள் மீது ஊற்றி தீயை கட்டுக் குள் கொண்டு வர முயன்ற னர். ஆனால் தீ கட்டுக் கடங் காமல் மளமளவென பரவி அதே பகுதியில் அடுத்தடுத்து இருந்த ராஜேந்திரன் (50), மணி கண்டன் (42), கணே சன்(51), பிரபு (28) ஆகிய 4 பேரின் கூரை வீடுகளும் கொளுந்து விட்டு எரிந்தன.

ரூ.5 லட்சம் சேதம்

ஒரே நேரத்தில் 7 வீடுகள் தீயில் எரிந்ததால் நாலுகால் மண்டபம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக குட வாசல், கூத்தாநல்லூர், நன்னி லம் ஆகிய பகுதிகளில் இருந் தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படை வீரர்கள் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் மூர்த்தி என்பவர் தனது வீட்டு மாடி யில் கட்டியிருந்த கூரை கொட் டகையும் எரிந்து சாம்பலானது. 7 வீடுகளில் இருந்த டி.வி., துணிமணிகள், வீட்டு உப யோக பொருட்கள் அனைத் தும் தீயில் கருகி சாம்பலாயின. எரிந்து சாம்பலான பொருட் களின் சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

ஆறுதல்

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அதிகாரி மோகன்ராஜ், உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, தாசில்தார் கண்ணன், நகர சபை தலைவர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்க தலைவர்கள் மணிகண்டன், கலியபெரு மாள் ஆகியோர் பாதிக்கப் பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்ததாக கூறப் படுகிறது. இதுகுறித்து திரு வாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். 

No comments:

Post a Comment