திருவாரூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் இரும்புத் துண்டுகள் வைக்கப்பட்டிருந்தது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டதையடுத்து, ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா என போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தஞ்சாவூரிலிருந்து காரைக்கால் செல்லும் பயணிகள் ரயில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு திருவாரூர் நோக்கி வந்தது. திருவாரூர் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது தண்டவாளத்தில் இரும்புத் துண்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை ஓட்டுநர் ஜானகிராமன் பார்த்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ரயிலை உடனடியாக நிறுத்திவிட்டு, தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்புத் துண்டுகளை அப்புறப்படுத்தினார். பிறகு, இதுகுறித்த தகவலை திருச்சி ரயில்வே கட்டுபாட்டு அலுவலகத்துக்கு தெரிவித்தார்.
இதையடுத்து, ரயில்வே முதுநிலை பிரிவு பொறியாளாó பிரபாகரன் திருவாரூர் ரயில்வே காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சார்பு ஆய்வாளர்கள் செந்தாமரை, கைலாசம், தலைமைக் காவலர் ஜவான் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தண்டவாளத்துண்டு, போல்ட் ஆகியவற்றை கைப்பற்றினாó.அவற்றை யார் வைத்தது என்பது தெரியவில்லை. ரயிலை கவிழ்க்க யாரேனும் சதி செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் அசம்பாவித செயல்களில் ஈடுபட முயற்சி மேற்கொள்ளப்பட்டதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தி இரும்புத் துண்டுகளை அப்புறப்படுத்தியதால், நிகழவிருந்த விபத்து தவிர்க்கப்பட்டது
No comments:
Post a Comment