Monday, 20 April 2015

மத்திய பல்கலைக்கழக கட்டிட விபத்து: 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம்






















திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் திருவாரூரை அடுத்த நீலக்குடி கிராமத்தில் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழக ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகம் நாகக்குடி கிராமத்தில் கட்டப்பட்டு வருகிறது. இங்கு கட்டப்பட்டு வரும் கட்டிடங்களுள் ஒன்று கடந்த மாதம் (மார்ச்) 29–ந்தேதி இடிந்து விழுந்தது. இதில் வெளிமாநில தொழிலாளர்கள் 3 பேர் உள்பட 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 16 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. கட்டிடம் இடிந்து விழுந்தது ஏன்? என்பது பற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


இந்த நிலையில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வந்த மத்திய பொதுப்பணித்துறையின் தலைமை பொறியாளரும், திட்ட மேலாளருமான தங்கமுத்து, நிர்வாக பொறியாளர் சந்திரன், உதவி பொறியாளர் செல்லப்பன் ஆகிய 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

No comments:

Post a Comment