Thursday, 9 April 2015

கொடிநகரும் நாகூர் ஹனிபாவும்

நமதூர் வரலாற்று பக்கங்களை  புரட்டி பார்த்தால் நிச்சயம் நாகூர் ஹனிபா கண்டிப்பாக  முக்கியமான இடத்தை பெறும் .


நமதுரை சேர்ந்த மலேசியா, சிங்கப்பூர்   பெரு வணிகர்கள் தங்கள் இல்ல திருமண விழாவில் இசை நிகழ்ச்சி நடத்த அழைக்கப்பட்டு வந்தனர் .பின்னர் கந்தூரி விழாவிலும் கலந்து கொண்டார் .


இருத்தாலும் நமதூர் மறைந்த பெரியவர்கள் பெயர்களை உரிமையுடன் சொல்லும் அளவிற்கு இணக்கமான உறவு இருந்தது .


கடந்த 1998ம் ஆண்டு தமிழ் நாடு வக்ப் வாரிய தலைவராக இருந்த போதும் நமதூர் முஹியத்தீன் ஆண்டவர்கள் பள்ளிவாசல் புதுப்பித்து கட்டும் போது அதற்கு தேவையான நிர்வாக அனுமதிகளை அளித்தும் 2008ம் ஆண்டு மே 23 அன்று நடைபெற்ற பள்ளிவாசல் திறப்புவிழாவில் சிறப்பு விருந்துனராக கலந்து கொண்டு பள்ளிவாசல் பற்றி பாடல்களை பாடி சிறப்பு செய்ததை யாரும் மறக்க முடியாது .


கொடிக்கால் பாளையம் நிச்சயம் நாகூர்  ஹனிபா அவர்களின் நினைவுகளை  எளிதில் மறைக்க முடியாது  .காலம் கடந்து காட்சியாகவும் அவரது குரல் செவிகளுக்கு என்றும் ஒலித்து கொண்டே இருக்கும் .









 இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

No comments:

Post a Comment