திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஏப். 23-ம் தேதி முதல் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் மற்றும் நீச்சல் பயிற்சிகள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பள்ளியில் படிக்கும் 16 வயதுகுட்பட்ட மாணவர்கள் முகாமில் பங்கேற்கலாம். தடகளம், கால்பந்து, வாலிபால், ஹாக்கி, கூடைப்பந்து மற்றும் நீச்சல் பயிற்சியளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04366-227158 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
No comments:
Post a Comment