Wednesday, 29 April 2015

நாடு முழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்























நாடு முழுவதும் சுமார் 100 ஸ்மார்ட் நகரங்களை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் தரப்பட்டிருக்கிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், இத்திட்டம் குறித்த முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து நாடு முழுவதும், 100 இடங்களில், ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான திட்டம் குறித்து அடுத்த மாதம் தொடங்கபடும் என்று மத்திய மந்திரி வெங்கைய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.

 ஸ்மார்ட் நகரங்களை அமைப்பதால் வெளிநாட்டு நிறுவனங்கள் நிறைய ஆர்வம் காட்டும். தற்போது மத்திய அரசு அந்நிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

ஸ்மார்ட் நகரத்தில் வெளிநாடுகளில் உள்ளது போல, அடிப்படை வசதிகள் மட்டுமின்றி, நவீன வசதிகளும் இதில் செய்யப்ப்டும்.

நாடு முழுவதும் ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் மோடியின் கனவு என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment