Wednesday, 8 April 2015

திருவாரூர்: ஏப். 11-ல் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்



திருவாரூர் மாவட்டத்தில் வரும் 11-ம் தேதி பொது விநியோகத் திட்ட குடிமைப்பொருள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:


திருவாரூர் வட்டம், திருவாதிரைமங்கலம், நன்னிலம் வட்டம் விசலூர், குடவாசல் வட்டம் விஸ்வநாதபுரம், வலங்கைமான் வட்டம் திருவோனமங்கலம்


, நீடாமங்கலம்
வட்டம் காணூர் அன்னவாசல், மன்னார்குடி வட்டம் பள்ளிவரித்தி, திருத்துறைப்பூண்டி வட்டம் ஆலிவலத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் ஏப். 11-ம்
தேதி நடைபெறவுள்ளது.


காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில், மக்கள் பொது விநியோகத் திட்ட அங்காடிகளின் செயல்பாடுகள், குடும்ப அட்டையில் பெயாó சேர்த்தல், நீக்குதல்,
திருத்தம், கடை மாற்றம்,  செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் .

No comments:

Post a Comment