Tuesday, 28 April 2015

திருவாரூர் மாவட்டத்தில் 4-வது நாளாக மழை நன்னிலத்தில் அதிகபட்சமாக 15 மி.மீட்டர் பதிவானது

















திருவாரூர் மாவட்ட பகுதியில் 4-வது நாளாக பரவலாக மழை பெய்தது. நன்னிலத்தில்அதிக பட்சமாக 15 மி.மீட்டர் பதிவானது.

கோடை வெயில்

வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு கோடை வெயில் மார்ச் மாதத்திலேயே வாட்டி வதைக்க தொடங்கி விட்டது. இதனால் அக்னி வெயிலை சமாளிக்க முடியுமா? என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்தனர். இந்த நிலையில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. அதன்படி திரு வாரூர் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முழு வதும் பலத்த மழை பெய்தது. இதைதொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாவட்டத்தில் ஆங் காங்கே சாரல் மழை பெய்தது வந்தது. இதனால் மாவட் டத்தில் வெயில் அளவு குறைந் தது.

4-வது நாளாக மழை

இந்த நிலையில் நேற்று தொடர்ந்து 4-வது நாளாக திருவாரூர் மாவட்ட பகுதி களில் பரவலாக மழை பெய் தது. திருவாரூரில் நேற்று வெயிலே இல்லை. காலை 8 மணி அளவில் பலத்த மழை பெய்தது. அதைதொடர்ந்து வானம் விட்டு விட்டு தூறியது. இதேபோல மாவட்டம் முழு வதும் பரவலாக மழை பெய்தது.

நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி நன்னிலத்தில் அதிகபட்சமாக 15 மில்லி மீட்டர் மழை பெய்தது. மாவட்டத்தின் மற்ற இடங் களில் பதிவான மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

மன்னார்குடி-14, திருத் துறைப்பூண்டி-4, முத்துப் பேட்டை -3, நீடா மங்கலம்-1. மாவட்டம் முழுவதும் மொத்தம் 37 மில்லி மீட்டர் மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத் தின் சராசரி மழை அளவு 4 மில்லி மீட்டர் ஆகும்.

பருத்தி வயலில் தண்ணீர்

கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்ததால் பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

இதனால் பருத்தி சாகுபடி செய்த விவ சாயிகள் கவலை அடைந்து உள்ளனர். 

No comments:

Post a Comment