Saturday 18 April 2015

தமிழகத்தில் இதுவரை 3.7 லட்சம் போலி குடும்ப அட்டைகள் ரத்து



உணவுப் பொருள் வழங்கல் துறையின் செயல்பாடுகள் குறித்து, அதிகாரிகள், அலுவலர்களுடன் சென்னையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினார், அந்தத் துறையின் அமைச்சர் ஆர்.காமராஜ். அப்போது அவர் பேசியது:
பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளைக் களைவதற்கு, உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலமாக மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் குறைதீர் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இந்த மாதம் வரை, 3 லட்சத்து 53 ஆயிரத்து 914 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 3 லட்சத்து 37 ஆயிரத்து 661 மனுக்கள் அன்றைய தினத்திலேயே தீர்வு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 16 ஆயிரத்து 253 மனுக்கள் பின்னரும் தீர்வு செய்யப்பட்டுள்ளன.

இன்று வரை 11 லட்சத்து 10 ஆயிரத்து 871 புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 24 ஆயிரத்து 626 புதிய குடும்ப அட்டைகள் மனுதாரர்களுக்கு வழங்குவதற்குத் தயாராக உள்ளன.

இன்று வரை 3 லட்சத்து 70 ஆயிரத்து 538 போலி அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டுள்ளன என்றார் அமைச்சர் ஆர்.காமராஜ்.

No comments:

Post a Comment