திருவாரூர் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாக பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக வீட்டுச் சுவர் இடிந்து இரண்டு வயது குழந்தை உயிரிழந்தது.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே அச்சுதமங்கலம் மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் ஆனந்தபாபு. தொழிலாளி. இவரது மனைவி மீனாட்சி. இவர்களது பெண் குழந்தை ஆனந்தி (2).
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை இவர்களது கூரை வீட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. இதில் குழந்தை ஆனந்தி மூச்சுத்திணறி உயிரிழந்தது. இதுகுறித்து நன்னிலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): நன்னிலம் - 16.20, திருத்துறைப்பூண்டி - 8.40, திருவாரூர் - 4.20, குடவாசல், பாண்டவையாறு தலா 2.20, வலங்கைமான், மன்னார்குடி தலா 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment