Thursday 29 October 2015

எகிப்தில் அதிசயம்: நெற்றியில் மட்டும் ஒற்றைக்கண்ணுடன் பிறந்த குழந்தை


எகிப்தில் உள்ள எல்சென்பெல்லாவெய்ன் நகரில் உள்ள மருத்துவமனையில் நெற்றியில் மட்டும் ஒற்றைக்கண்ணுடன் ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:
சைக்ளோபியா’ எனப்படும் இவ்வகை குறைபாடு ஆயிரத்தில் நான்கு பிரசவங்களில், குறிப்பாக.., விலங்கினப் பிரசவங்களில் ஏற்படுவது உண்டு. கருவுற்றிருந்த காலத்தில் அந்தக் குழந்தையின் தாய் உட்கொண்ட மருந்துகள் மற்றும் கதிர்வீச்சின் பாதிப்பால், கருவில் இருந்த அந்தக் குழந்தைக்கு இந்த குறைபாடு ஏற்பட்டிருக்கலாம்.
எனினும் இந்த குழந்தை இன்னும் சில நாட்களே உயிர்வாழும் எனவும் தெரிவித்தனர். இதனால் அந்த குழந்தையின் பெற்றோர் மிகுந்த வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment