தேசிய ஓய்வூதிய திட்டத்தில் என்.ஆர்.ஐ எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்களும் சேரலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: -
இந்திய குடிமக்கள் அனைவரும் தங்கள் ஓய்வு கால பணத் தேவைகளை சமாளிப்பதற்காக தேசிய ஓய்வூதியத் திட்டம் கடந்த 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. தற்போது இதில் வெளிநாடு வாழ் இந்தியர்களும், சேர்ந்து கொள்ள முடியும்.
இந்தியாவிலுள்ள தங்கள் வங்கிக் கணக்கில் வழக்கமாக பணம் செலுத்தும் முறையிலேயே ஓய்வூதிய திட்டத்துக்கான சந்தாவையும் செலுத்தலாம், குறைந்த பட்சம் 6000 ரூபாய் முதல் செலுத்தலாம் எனவும் அரசுடன் கலந்து ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இத்திட்டத்தில் சேரும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென தனியாக எந்த ஒரு கட்டுப்பாடும் நிபந்தனையும் விதிக்கப்படாது என்றும் அந்த
No comments:
Post a Comment