Saturday, 24 October 2015

கடந்த மாதம் தான் வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான செப்டம்பர் : ஆய்வில் அதிர்ச்சி


உலகின் வரலாற்றிலேயே கடந்த மாதம் தான் மிகுந்த வெப்பமான செப்டம்பர் மாதமாக பதிவாகியிருப்பதாக  அமெரிக்காவின் கடல் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
1880ம் ஆண்டில் இருந்து எடுத்துக் கொண்டால், 2015ம் ஆண்டுதான் மிகவும் வெப்பமான ஆண்டாகப் பதிவாகியிருப்பதாகவும், தொடர்ந்து 5 மாதங்கள் அதிகபட்ச வெப்பம் நிலவுவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில், நிலம் மற்றும் கடற் பரப்புகளை கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில், 2015ம் ஆண்டில் தொடர்ந்து 9 மாதங்களுமே வெப்பம் அதிகபட்சமாகவே பதிவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வெப்பம் என்று நாம் ஒவ்வொரு ஆண்டுமே சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு ஆய்வு முடிவுகளும் அதை உறுதிபடுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment