Sunday, 25 October 2015

துபை விமான நேரத்தில் மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது

திருச்சி - துபை இடையே இயக்கப்பட்டு வரும் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நேரத்தில் தாற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் இயங்கப்பட்ட விமானம் பகல் நேரத்தில் இயக்கப்படவுள்ளது.
துபையிலிருந்து தினசரி நள்ளிரவு 12.05 மணிக்கு திருச்சி வந்து பயணிகளை இறக்கி ஏற்றிக்கொண்டு மீண்டும் 12.55 மணிக்கு துபை செல்லும். இந்த விமானம் குளிர்கால அட்டவணை மாறுதல் தொடர்பாக பகல் நேர விமானமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த விமானம் இனி பகல் 12.45-க்கு திருச்சி வந்து அதன் பின்னர் 1.30-க்கு மீண்டும் துபை புறப்பட்டுச்செல்லும்.
இந்த நடைமுறை இன்று தொடங்கி டிசம்பர் 6-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அதன் பின் மீண்டும் மாற்றம் செய்யப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ள

No comments:

Post a Comment