Monday 19 October 2015

உள்நாட்டில்தான் கருப்புப் பணம் அதிகம்: எஸ்ஐடி

"வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைவிட உள்நாட்டில்தான் அதிக அளவில் கருப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது' என்று சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) துணைத் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி அரிஜித் பசாயத் தெரிவித்தார்.
ஒடிஸா மாநிலம், கட்டக்கில் மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள் பங்கேற்ற உயர்நிலை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று அரிஜித் பசாயத் பேசியதாவது: வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைவிட உள்நாட்டில்தான் அதிக அளவில் கருப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் கருப்புப் பணம் உருவாகாமல் தடுக்க வேண்டும்.
சில அறக்கட்டளைகளும், கல்வி நிறுவனங்களும் ரகசியமாக பெரிய அளவில் பணப் பரிவர்த்தனைகளில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இவை மிகத் தீவிரமான குற்றச்சாட்டுகளாகும். இதுதொடர்பாக சிபிஐ, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை ஆகியவை விசாரணை நடத்தி வருகின்றன. ஒரு சில விவகாரங்களில், நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சுரங்க முறைகேடுகள் தொடர்பாக ஒடிஸா, கோவா, பெங்களூருவில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது என்றார்.

No comments:

Post a Comment