திருவாரூர் மாவட்டத்தில் 2-வது நாளாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சாலைகளில் வெள்ளம்
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் தொடங்கியது. இந்த பருவமழை காலத்தில் ஏற்பட்ட வெப்ப சலனம் காரணமாக சில நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து இருந்தது. அதன்படி நேற்றுமுன்தினம் மாலை மழை தொடங்கியது. நேற்று காலை வானம் கருமேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் 2 மணிக்கு தொடங்கிய மழை இடைவிடாது மாலை வரை பெய்தது. இதேபோல் மன்னார்குடி, கூத்தாநல்லூர், முத்துப்பேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. மழையினால் பள்ளி மாணவர்கள், தரைக்கடை வியாபாரிகள் சற்று சிரமத்திற்குள்ளாயினர். திருவாரூரில் அனைத்து சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றன. சம்பா சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் தண்ணீர் பிரச்சினையால் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர். தொடர்ந்து மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சம்பா சாகுபடி பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வடகிழக்கு பருவ மழை காலம் விரைவில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக திருவாரூர் மாவட்ட பகுதியில் பரவலாக மழை பெய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மழை அளவு
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு (மி.மீட்டர்) விவரம் வருமாறு:-
திருவாரூர்-24, குடவாசல்-25, மன்னார்குடி-4, முத்துப்பேட்டை-31, நன்னிலம்-17, நீடாமங்கலம்-14, திருத்துறைப்பூண்டி-37, வலங்கைமான்-50, பாண்டவயாறு தலைப்பு-10. சராசரியாக மாவட்டத்தில் 24 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

No comments:
Post a Comment