மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வீட்டில் இருந்து அவரது பொருட்கள் அகற்றப்பட்டு வருகின்றன. முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், தில்லியில் ராஜிஜி மார்க் இல்லத்தில் வசித்து வந்தார்.
கடந்த ஜூலை 27-ம் தேதி மாரடைப்பால் அப்துல் கலாம் காலமானார். இதையடுத்து அப்துல்கலாம் தில்லியில் வாழ்ந்த வீட்டை வருகிற 31-ம் தேதிக்குள் காலி செய்து தருமாறு அவரது தனி உதவியாளர்களிடம் மத்திய நகர்புற மேம்பாடு அமைச்சகம் கேட்டுக் கொண்டு, அதற்கு நோட்டீசும் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், கலாம் வாழ்ந்த இல்லத்தில் இருந்த அவரது புத்தகங்கள், பயன்படுத்திய பொருட்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. அவை அனைத்தும், கலாமின் சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்கு கொண்டு செல்லப்படும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment