நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் "மேகி' உடனடி நூடுல்ஸ் உணவுப் பொருள் விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை குஜராத் மாநில அரசு திங்கள்கிழமை நீக்கியது.
மேகி நூடுல்ஸ் உணவுப் பொருள்களுக்கு தேசிய அளவில் விதிக்கப்பட்டிருந்த தடையை, மும்பை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் நீக்கியதையடுத்து, குஜராத் அரசின் மாநில உணவு, மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதை, அந்த ஆணையத்தின் தலைவர் எச்.ஜி.கோஷியா திங்கள்கிழமை தெரிவித்தார்.
முன்னதாக, மேகி நூடுல்ஸ் உணவுப் பொருளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட காரீயம், மோனோசோடியம் குளூட்டாமேட் நச்சு இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து, அந்த உணவுப் பொருள்களின் விற்பனைக்கு குஜராத் அரசு கடந்த ஜூன் மாதம் தடை விதித்தது.
No comments:
Post a Comment