மொஹரம் பண்டிகைக்கான விடுமுறை சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டதால் அனைத்து வங்கிகளும் இன்று 23/10/2015 வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் மொஹரம் பண்டிகைகளுக்காக தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தலைமை காஜியின் அறிவிப்பைத் தொடர்ந்து மொஹரம் விடுமுறை, வெள்ளிக்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்கு மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்களும் நாளை வழக்கம்போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வங்கிகள் அனைத்தும் இன்று இயங்கும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வரும் சனிக்கிழமை, நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகள் அனைத்திற்கும் விடுமுறை என அறிவிக்கபட்டுள்ளது.
No comments:
Post a Comment