Tuesday, 27 October 2015

திருவாரூர் ஆழித்தேர் வெள்ளோட்டம் நடந்தது


திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற தியாகராஜர் கோயில் ஆழித் தேர் வெள்ளோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 
 திருவாரூர் நகரில் நடைபெறும் விழாக்களில் தொன்மையும், பெருமையும் வாய்ந்த விழா என்றால் அது ஆழித் தேரோட்ட விழாவே. ஐந்தடுக்கு கட்டுமானங்களை கொண்ட தோó பீடத்தில் 96 அடி உயரத்தில் அலங்காரம் செய்யப்பட்டு சுமார் 350 டன் எடையில் தோó கம்பீரமாக அசைந்து வருவதைப் பார்க்க பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தாóகள் வருவார்கள்.
 கடந்த 16.7.2010 அன்று நடைபெற்ற ஆழித்தேரோட்டத்துக்குப் பிறகு தேர் புதுப்பிக்க முடிவெடுக்கப்பட்டு, 2.8.2010 முதல் தேர் பிரிக்கும் பணி தொடங்கி சில மாதங்களில் நிறைவடைந்தது. பின்னர், புதுத்தேர் கட்டும் பணி சுமார் ஓராண்டுக்கு பிறகு தொடங்கி சில நாள்களுக்கு முன்பு நிறைவடைந்தது.
 இதையடுத்து, தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை திங்கள்கிழமை ஆழித் தேர், சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்ட விழா நடத்த தீர்மானித்தது. 
 அதன்படி, திங்கள்கிழமை ஆழித்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி,பிரவேச பலி, ம்ருத்சஹ்கிரஹணம், மாலை 5 மணிக்கு அங்குரார்ப்பணம், ரஷ்பந்தனம், 6 மணிக்கு முதல்கால யாகம், பூர்ணாஹூதி தீபாராதனை நடைபெற்றது. 
 தேர் வெள்ளோட்டம்: திங்கள்கிழமை காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகம், 9 மணிக்கு பூர்ணஹூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.15 மணிக்கு ஆழித்தேர் பிரதிஷ்டை செய்யப்பட்டதையடுத்து, காலை 9.20 மணியளவில் சுப்ரமணியர் தேர் வெள்ளோட்டம் தொடங்கியது. பின்னர் 9.30 மணிக்கு ஆழித்தேர் வெள்ளோ

No comments:

Post a Comment