தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2A ஜனவரி மாதம் 24 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) தேர்வு அறிவிப்பை கடந்த செப்டம்பர் மாதம் சி.பி.எஸ்.இ. வெளியிட்டது. இம்முறை நெட் தேர்வும், டி.என்.பி.எஸ்.சி. தேர்வும் ஒரே தேதியில் வருவதால் எதை எழுதுவது என்ற குழப்பம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 27 ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த தேர்வு, ஜனவரி மாதம் 24 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment