மழைக்காலங்களில் அறுந்து கிடக்கும் மின் கம்பிகளைத் தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சென்னை மின் பகிர்மான மேற்கு வட்ட மேற்பார்வை பொறியாளர் க.க. தங்கவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வுப் பெட்டிகள், வயர்கள் ஆகியவற்றின் அருகே செல்ல வேண்டாம். சாலையோரங்களில், மின் இணைப்புப் பெட்டிகளின் அருகில் தேங்கி நிற்கும் நீர் குட்டைகளில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.
அவசர நேரங்களில் மின் இணைப்பை விரைந்து துண்டிக்கும் வகையில் பொதுமக்கள் விழிப்புணர்வோடும், மிகுந்த முன் எச்சரிக்கையோடும் செயல்பட்டு மின் விபத்துகளைத் தவிர்க்க வேண்டும்.
No comments:
Post a Comment