Sunday, 22 November 2015

வெளிநாடு வாழ் இந்திய நண்பர்கள் கவனத்திற்கு...

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கான பிரச்சினைகளை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.



வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் பிரச்சினைகள், அதாவது வெளிநாடு சென்றவரிடமிருந்து தகவல் ஏதுமில்லாத இனங்கள், தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்தல், வெளிநாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இனங்கள், இறந்த வகை அல்லது காயமடைந்தவர்கள் இழப்பீட்டுத் தொகை கேட்டல், வெளிநாட்டில் இறந்தவர்களின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருதல் போன்றவை தொடர்பான விவரங்களை பதிவு செய்ய ஏதுவாக வலைத்தளம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

http://org2.passportindia.gov.in/AppConsularProject/welcomeLink என்ற அந்த வலைத்தளத்தில் விபரங்களை பதிவு செய்து, அவ்வப்போதுள்ள நிலவரத்தை வலைத்தளம் மூலமாகவே உறவினர்கள் தெரிந்து கொள்ளலாம்.

வலைதளத்தில் பதிவு செய்ததும், புகார்தாரர்களின் விபரம் குறிப்பிட்ட நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு கண்காணிக்கப் படும். பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் .

No comments:

Post a Comment