Thursday 12 November 2015

அந்தமான் தீவு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை:(நவ.15) முதல் மீண்டும் பலத்த மழை

அந்தமான் தீவு அருகே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது வரும் 14ம் தேதி வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
இதனால் வட மாவட்டங்களின் ஒரு சில இடங்களிலும், தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறும் போது அடுத்த 24 மணி நேரத்தில் மேலடுக்கு சுழற்சியால், தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. இதனிடையே தெற்கு அந்தமான் பகுதியில், புதிதாகக் காற்றழுத்தத் தாழ்வு உருவாகி வருகிறது.
இது நகரும் பட்சத்தில், தமிழகம், புதுச்சேரியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.15) முதல் மீண்டும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார் அவர்.

No comments:

Post a Comment