"பிகார் தேர்தல் முடிவுகள், பிரதமர் நரேந்திர மோடிக்கு அரசியல் பின்னடைவாகும்' என்று அமெரிக்க ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
மிச்சிகன் பல்கலைக்கழக சந்தையியல் பேராசிரியராகப் பணிபுரியும் புனீத் மஞ்சாந்தா என்ற நிபுணர், இதுகுறித்து கூறியதாவது:
அரசியல்வாதிகள் மீதான தில்லி வாக்காளர்களின் வெறுப்புணர்வால் அங்கு ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்ததைப்போல் அல்லாமல், கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் மோடி தலைமையிலான ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த மக்களின் எதிர்மறைக் கருத்துக்களை பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கின்றன.
இத் தேர்தல் முடிவு, பொருளாதாரச் சீர்திருத்தங்களின் வேகத்தைக் குறைக்கும் என்று புனீத் மஞ்சாந்தா தெரிவித்தார்.
மேலும், பல்வேறு ஊடகங்களும் இதுபற்றி செய்திகளை வெளியிட்டுள்ளன. "இந்தியாவின் ஆளுங்கட்சி முக்கிய மாநிலத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்தது' என்று தி வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் செய்தியில் கூறப்பட்டிருந்தது.
"மேற்கு வங்கம் உள்ளிட்ட இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் தங்கள் அரசியல் ஆதிக்கத்தை விரிவாக்க முயலும் பாஜகவின் முயற்சிக்கு இந்தத் தோல்வியால் தடங்கல் ஏற்பட்டுள்ளது' என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment