Sunday, 15 November 2015

கூத்தாநல்லூரில் பள்ளிவாசலுக்கு மர்ம நபர்கள் தீவைப்பு


கூத்தாநல்லூரில் புதன்கிழமை மர்ம நபர்கள் யாரோ பூட்டின் துவராம் வழியாக ஆயில் போன்ற திராவகத்தை ஊற்றி தீவைத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் சவுக்கத்அலி தெருவில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. இப்பள்ளிவாசலில் புதன்கிழமை மர்ம நபர்கள் யாரோ பூட்டை கம்பியால் நெம்பி அதன் வழி யாக ஆயில் போன்ற திராவகத்தை ஊற்றி தீ வைத்துள்ளனர். இதில் ஜன்னல், ஸ்கிரீன் (ஜன்னல் துணி), சமாதிதுணி, மரக்கதவு ஆகியவை தீயில் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ. 5,000 ஆகும். இதுகுறித்து கூத்தாநல்லூர் பெரிய பள்ளிவாசல் தலைவர் சிகாபுதீன் (73) கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி நாள் 14.11.15

No comments:

Post a Comment