Thursday 26 November 2015

திருவாரூர் அரசு அரிசி கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் அரிசி மூட்டைகள் நாசம்


திருவாரூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்புக் கிடங் கில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் அரிசி மூட்டைகள் தீயில் எரிந்து நாசமானது.
திருவாரூர் தஞ்சை சாலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக சேமிப்புக் கிட ங்கு உள்ளது. இச்சேமிப்புக் கிடங்கில் மாவட்ட முழுவதும் உள்ள நியாயவிலைக்கடை களுக்கு அனுப்புவதற்கான அரிசி,பருப்பு போன்ற அத்தியாசியப்பொருட்கள் இருப்பு வை க்கப்பட்டுள்ளது. அரிசிகளில் பூச்சித் தாக்குதல் ஏற்படுவதைத் தடுக்க மூட்டை மீது பா ஸ்பரஸ் மாத்திரை கவர்ல் வைத்து, தார்பாய்கள் கொண்டு பாதுகாப்பாக மூடப்படுகிற து.
இந்த பாஸ்பரஸ் மாத்திரைகள் தண்ணீர் பட்டாலும், அதிக வெப்பம் ஏற்பட்டாலும் உட னடியாக தீப்பிடிக்கும் தன்மை உடையது. இந்நிலையில் திங்கள்கிழமை பெய்த மழை யின் காரணமாக குடோனில் அடுக்கி வைத்திருந்த அரிசி மூட்டைகளில் வைத்திருந்த பாஸ்பரஸ் மாத்திரை மீது தண்ணீர் பட்டுள்ளது. இதனால் பாஸ்பரஸ் தீ பிடித்து எரிந் ததில் சுமார் 20 மூட்டைகள் தீயில் கருகி நாசமானது.
கரும்புகை வருவதை அறிந்த ஊழியர்கள் உடனடியாக திருவாரூர் தீயணைப்பு துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அலுவலர் சிவக்குமார் தலைமையில் தீய ணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனர். இதனால் மிகப் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து திருவாரூர் நகரக் காவல் நிலையப் போலீ ஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment