கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து நீடாமங்கலம் வழியாக காரைக்காலுக்கு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கமாக நீடாமங்கலத்திற்கு காலை 9.20 மணி அளவில் வரும். ஆனால் நேற்று காலை 1 மணி நேரம் 34 நிமிடங்கள் தாமதமாக 10.54 மணிக்கு எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில் நீடாமங்கலம் வந்தது. இதனால் திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர். நீடாமங்கலம், திருவாரூர் வழித்தடத்துக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து தாமதமாக இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment