Saturday, 21 November 2015

கூட்டுறவு பட்டயப்பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 5ம் துவக்கம்


T

திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் கண்ணன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை, கணினி மேலாண்மை, நகை மதிப்பீடும் அதன் நுட்பங்களும் குறித்து 3 சான்றிதழ்களுடன் கூடிய 17-வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்புகள் அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி தொடங்கப்பட உள்ளன. பயிற்சியில் சேர எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களில், சங்கங்களில், வங்கிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்கும் இப்பயிற்சி வழங்கப்படும்.

கூட்டுறவு நிறுவனங்கள், வங்கிகள், சங்கங்களில் கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சியின்றி பணிபுரியும் பணியாளர்களில் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும், கருணை அடிப்படையிலும் அல்லது அரசு, பதிவாளர் உத்தரவின்படி பணி நியமனம் செய்யப்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலைய அலுவலகத்தில் ரூ.50 கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை பெற்று, அதை பூர்த்தி செய்து கல்வி தகுதி சான்றிதழ், பள்ளி மாற்றுசான்றிதழ், பணி சான்றுடன் டிசம்பர் 2-ந் தேதிக்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பித்திட வேண்டும். இது தொடர்பான விவரங்களை திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment