Tuesday, 10 November 2015

மேகி நூடுல்ஸ் விற்பனை மீண்டும் தொடக்கம்

இந்தியாவில் மேகி நூடுல்ஸ் வகைகளின் விற்பனையை 5 மாதங்களுக்குப் பிறகு நெஸ்லே இந்தியா நிறுவனம் மீண்டும் திங்கள்கிழமை தொடங்கியது.
 இதுதவிர்த்து, பிரபல இணையதளம் மூலமும் மேகி நூடுல்ûஸ விற்பனை செய்யும் நடவடிக்கையில் அந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
 இதுகுறித்து தில்லியில் நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுரேஷ் நாராயணன் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
 மேகி நூடுல்ஸ் விற்பனையை 100 நகரங்களில் பழைய விநியோகஸ்தர்கள் மூலம் தொடங்கியுள்ளோம். வரும் நாள்களில், மேலும் பல நகரங்களுக்கு மேகி நூடுல்ஸ் விற்பனையை விரிவுபடுத்துவோம்.
 பஞ்சாப், ஒடிஸா, மணிப்பூர், பிகார், ஹிமாசலப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட 8 மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் மேகி நூடுல்ஸ் விற்பனை தொடங்கப்படவில்லை என்றார் அவர்.
 இதுகுறித்து நெஸ்லே இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
 மேகி நூடுல்ஸ் விற்பனை திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளது. மேகி நூடுல்ஸுக்கு 8 மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் மட்டும் மேகி நூடுல்ஸ் விற்பனை செய்யப்படாது. அந்த மாநிலங்களில், மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு அனுமதி பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
 மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தேசிய தரக் கட்டுப்பாடு, சோதனை மையங்களில் மேகி நூடுல்ஸ் வகைகள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. அதில், மேகி நூடுல்ஸ் பொட்டலங்களில் தடை செய்யப்பட்ட எந்தப் பொருளும் கலக்கவில்லை என்று அறிக்கை அளிக்கப்பட்டது என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment