Friday 13 November 2015

தீபாவளி பண்டிகையன்று திருவாரூர் மாவட்டத்தில் சராசரி நாளை விட 2 மடங்கு அதிகமாகும்.










தீபாவளி பண்டிகையன்று திருவாரூர் மாவட்டத்தில் ரூ.3 கோடியே 22 லட்சத்திற்கு மது விற்பனை நடந்துள்ளது. இது சராசரி நாளை விட 2 மடங்கு அதிகமாகும்.

மதுவிற்பனை

திருவாரூர் மாவட்டத்தில் 152 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கடந்த மாதம் ரூ.45 கோடியே 26 லட்சத்து 73 ஆயிரத்திற்கு மது விற்பனை நடைபெற்றது. சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.1 கோடியே 50 லட்சத்துக்கு மது விற்பனை செய்யப்படும். பண்டிகை நாட்களில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம். அதிலும் தீபாவளி, புத்தாண்டு போன்ற விசேஷ நாட்களில் மதுவிற்பனை பல மடங்கு இருக்கும்.

தீபாவளி பண்டிகையன்று திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிக மதுபானங்கள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஒவ்வொரு கடையிலும் கூடுதலாக மது வகைகள் இருப்பு வைக்கப்பட்டன. தீபாவளி பண்டிகையன்று ரூ.46 லட்சத்து 71 ஆயிரத்து 850-க்கு 38 ஆயிரத்து 880 பீர் பாட்டில்களும், ரூ.2 கோடியே 75 லட்சத்து 33 ஆயிரத்து 510-க்கு 5,560 பெட்டி மது வகைகளும் ஆக மொத்தம் ரூ.3 கோடியே 22 லட்சத்து 5 ஆயிரத்து 360-க்கு மதுவகைகள் விற்பனை நடைபெற்று உள்ளன. இது சராசரி நாளை விட 2 மடங்கு அதிகமாகும்.

No comments:

Post a Comment