Monday 30 November 2015

அடுத்து வரும் நான்கு நாட்களில் தமிழகத்தில் கனமழை பெய்யும்: வானிலை அறிவிப்பு

வங்கக்கடலில் புதிய காற்றழுத் தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.
மேலும் இன்று முதல் அடுத்து வரும் நான்கு நாட்களில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று இரவு சென்னையில், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, வடபழனி, பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, ஈக்காட்டுத்தாங்கல், ராயப்பேட்டை, பல்லாவரம், விருகம்பாக்கம் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
இதேபோல், கடலூர் மாவட்டத்தின் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல், சின்னாளபட்டி, வத்தலகுண்டு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.
அரியலூர் மாவட்டம் செந்துறை, ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒருமணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. ஈரோடு, கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, திருவையாறு பகுதிகளிலும், சேலம் மாவட்டம் ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது. திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாமக்கல், வேலூர், கிருஷ்ணகிரி, திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்தது.
இன்று முதல் அடுத்து வரும் நான்கு நாட்களில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.

No comments:

Post a Comment