Sunday 8 November 2015

திருவாரூர் தியாகராஜர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது



திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ, சமய மரபில் பெரிய கோவிலாகவும், பஞ்சபூததலங்களில் ஒன்றாக விளங்குகிறது. சிறப்புமிக்க இந்த கோவில் கும்பாபிஷேகத்துக்காக ரூ.3 கோடியே 18 லட்சம் நிதியை அரசு ஒதுக்கீடு செய்தது. மேலும் உபயதாரர்களின் நிதியளிப்புடன் கோவில் திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்தன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி திருவாரூர் நகரில் இன்று கோவிலை சுற்றி 4 வீதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கடலூர், சீர்காழி, மயிலாடுதுறை, நன்னிலம், ஓடச்சேரி, திட்டச்சேரி மற்றும் திருமருகல் ஆகிய வழித்தடங்களிலிருந்து வரும் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் கொடிக்கால்பாளையம் அய்யனார் கோவில் தெரு வழியாக வந்து பேபி டாகீஸ் சாலை வழியாக திருவாரூர் பஸ் நிலையத்துக்கு வரவேண்டும்.

போலீஸ் பாதுகாப்பு

இதைப்போல திருவாரூர் பஸ் நிலையத்திலிருந்து சென்னை, கடலூர், சீர்காழி, மயிலாடுதுறை, நன்னிலம், ஓடாச்சேரி, திட்டச்சேரி மற்றும் திருமருகல் ஆகிய வழித்தடங்களிலிருந்து செல்லும் பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் மேம்பாலம், விளமல், பவித்திரமாணிக்கம், காட்டூர், திருக்கண்ணமங்கை, வடகண்டம், வெட்டாற்று பாலம், எட்டியலூர், மத்தியப் பல்கலைக்கழகம் வழியாக செல்ல வேண்டும். கும்பாபிஷேகத்தையொட்டி பாதுகாப்பு பணியில் 1,600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் உயர் கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக்கள் கோவிலை சுற்றி பொறுத்தப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment