Monday, 23 November 2015

நாகை திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை


நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (நவ.23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி கூறியிருப்பது:
வங்கக்கடலில் உருவான காற்றத்தழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் அநேக இடங்களில் பலத்த மழைப்பெய்து வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (நவ.23) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
இதேபோல் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் (பொ) த. மோகன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை (நவ.23) விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment