Friday 20 November 2015

புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகம், புதுவையில் மழை பெய்யும்

தமிழகத்தின் உள் மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
லட்சத்தீவுப் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளது. காற்றின் மேலடுக்குச் சுழற்சி காரணமாக இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது, கடல் பகுதியில் நிலவும் ஈரம் மிகுந்த காற்றை நிலப்பகுதிக்குள் இழுக்கும் என்பதால், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில், பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்தார்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உண்டு. கடந்த 24 மணி நேரத்தில், சங்கரன்கோயில் மற்றும் கடம்பூரில் அதிகபட்சமாக 14 செ.மீ மழை பெய்துள்ளது

No comments:

Post a Comment