Friday 27 November 2015

இ-சேவை மையங்களில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்காலம்

திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்க ளில் செயல்படும் அரசு இ-சேவை மையங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையத்தால் நடத்தப்படும் தேர்வுக்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் எனத் தெரி வித்துள்ளார் ஆட்சியர் (பொ) த. மோகன்ராஜ்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் அனைத்து வட்டா ட்சியர் அலுவலகங்களில் செயல்படும் இ.சேவை மையங்களில் தமிழகஅரசின் வருவா ய்த்துறை,சமூக நலத்துறை சார்ந்த பல்வேறு சேவைகள் இணைய வழி மூலம் வழங்க ப்படுகிறது.
சேவை மையங்கள் மூலமாக பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறும் வசதி, ஆதார் அட் டை பதிவு செய்யும் போது தெரிவிக்கப்பட்ட செல்போன் எண்ணை மாற்றும் வசதி மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதி கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. அவ் வகையில் தற்போது புதிதாக தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் விண்ணப்பத்தா ராóகளுக்கு நிரந்திர பதிவு செய்தல், தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், விண்ணப்பங்களி ல் மாறுதல் செய்தல் மற்றும் விண்ணப்பத்தின் நகல் பெறுதல் ஆகிய சேவைகள் புதி யதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இச்சேவைகளை பெற பொதுசேவை மையங்களுக்கு செலுத்த வேண்டிய தொகை, நிர ந்தரப் பதிவுக்கு ரூ.50, தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ.30, விண்ணப்பங்களில் மாறு தல் செய்ய ரூ.5, விண்ணப்பத்தில் மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெற ரூ. 20 சேவை கட்டணமாக செலுத்த வேண்டும்.தொகைகளை சேவை மையத்திலேயே செலுத்தலாம். பணம் செலுத்தியதற்கு ஒப்புகை சீட்டு உடனடியாக வழங்கப்படும். எனவே மக்கள் இச்சேவைகளை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment