அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக உருவெடுத்துள்ளது.
இந்தப ்புயலானது தென் மேற்கு நோக்கி நகர்ந்து ஏடன் வளைகுடாவை நோக்கிச் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயலுக்கு மேக் (MEGH) என பெயரிடப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், 'மேக்' புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் தொடர்வதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி அதிகபட்சமாக பாபநாசம், மேல் அணைக்கட்டு, பெருந்துறை ஆகிய பகுதிகளில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.