தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
குமரிக் கடலில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி, அங்கிருந்து மேற்கு நோக்கி நகர்ந்து, குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலைகொண்டுள்ளதால் தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்யும் என்று சென்னை ஆய்வு மைய இயக்குநர் ரமணன், இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதன் காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும், இதனால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்குள் செல்ல வேண்டும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று மதியம் 12.30 மணியளவில் தொடங்கிய கனமழையால், சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
தென் மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்ந்து வருகிறது.
Great article,thanks a lot for sharing this useful post with us
ReplyDeletelatha