மாவட்டத்தில் வெள்ளத் தடுப்புப் பணிகளுகாக காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள மீட்புக்குழுவுக்கு அறிவுரை கூறும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன்.
திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் வெள்ளதடுப்பு பணிகளுக்கு காவல்துறை சார்பில் மீட்புகுழு அமைக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது பெய்து வரும், கனமழை காரணமாக வீடுகளின் சுவர் இடிந்து சேதம், சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு, மின்கம்பம் விழுதல் போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருவதால், இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, பொதுமக்களை காக்க, போக்குவரத்து இடர்பாடுகளை சரி செய்ய மாவட்ட காவல்துறை சார்பில் இந்த மீட்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த. ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் உட்கோட்ட அள வில் திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை ஆகிய தலைமையிட காவல் நிலையங்களில் காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினரை கொண்ட மீட்புக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த மீட்புக் குழுவானது ஒரு ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் தலைமையில் செயல் படுகிறது. மீட்பு குழுவுக்கு தனித்தனியாக காவல் வாகனம் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த வா கனத்தில் அவசர காலங்களில் பயன்படுத்த தேவையான கயிறுகள், அரிவாள், கோடாரி, ரம்பம், லைப் ஐாக்கெட், மண்வெட்டி, கடப்பாறை போன்ற உபகரணங்கள் வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் எந்த பகுதியில் கனமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டாலும் உடனடியாக திருவாரூர் மாவட்டதில் இயங்கும் அலைப்பேசி எண்ணுக்கு (9442090108) தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment