நறுமணப் பொருட்களின் அரசனாக கருதப்படுவது மிளகு. இந்தியாவை தாயகமாகக் கொண்ட மிளகு உற்பத்தியில் கேரளா முன்னிலையில் உள்ளது. அதற்கடுத்தபடியாக, கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. சர்வதேச மிளகு உற்பத்தியுடன் ஒப்பிடும் போது, இந்தியாவில் உற்பத்தி குறைவாகவே உள்ளது. ஒரு நேரத்தில் மிளகு ஏற்றுமதியில் முன்னணியில் இருந்த இந்தியா தற்போது பின்தங்கியுள்ளது. அடுத்த மிளகு சாகுபடி வரும் ஜனவரி மாதம் துவங்க உள்ள நிலையில், பருவம் தவறிய மழை காரணமாக இந்தியாவில் அடுத்த ஆண்டு கருமிளகு உற்பத்தி 15% முதல் 20% வரை குறையும் என இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்ற ஆண்டு மட்டும் 21,450 டன்கள் கருமிளகை இந்தியா உற்பத்தி செய்திருந்தது. இது ரூ.1,200 கோடி வர்த்தகத்தை இந்தியாவுக்கு வழங்கியிருந்தது. ஏற்கனவே, சென்ற ஆண்டு சப்ளை குறைவு காரணமாக விலை உயர்ந்து இருந்தது. இது ஏற்றுமதியை வெகுவாக பாதித்துள்ளது. தற்போது, உள்நாட்டு சந்தையில் ஒரு கிலோ கருமிளகு ரூ.700-ஐ தொட்டுள்ளது. விரைவில் இந்த விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இந்திய நறுமணப் பொருட்கள் வாரியம் தெரிவித்துள்ளது.
எனினும், இதுகுறித்த சரியான நிலவரம் இம்மாத இறுதியில் மைசூரில் நடைபெற உள்ள சர்வதேச மிளகு சங்கத்தின் (ஐ.பி.சி) கூட்டத்திற்கு பிறகே தெரியவரும்.
தற்போதைய நிலவரப்படி, இந்திய மிளகு ஒரு டன்னுக்கு 11,800 டாலர்கள் என்ற விலையில் ஏற்றுமதியாகி வருகிறது. இது மிளகு உற்பத்தியில் உலக அளவில் முன்னணியில் உள்ள வியட்நாம், இந்தோனேசியா நாடுகளை அதிகமாகும்
No comments:
Post a Comment