T
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருவாரூர் நகர் இயக்குதலும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் சந்திரசேகரன் ஒரு அறிக்கை
வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
திருவாரூர், அடியக்கமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் திருவாரூர் நகர், விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூர், முகந்தனூர், திருப்பயத்தாங்குடி, மாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment