Monday 1 August 2016

Tiruvarur collector: திருவாரூர் மாவட்ட ஆட்சியராக எல்.நிர்மல் ராஜ்

திருவாரூர் மாவட்ட ஆட்சியராக எல்.நிர்மல் ராஜ் இ ஆ ப அவர்கள் இன்று 31/07/2016 தனது பொறுப்புகளை ஏற்று கொண்டார்கள் .


திருவாரூர் மாவட்ட புதிய ஆட்சியராக இல. நிர்மல்ராஜ் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த எம். மதிவாணன் மாற்றப்பட்டு புதிய ஆட்சியராக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றிய இல. நிர்மல்ராஜ் நியமிக்கப்பட்டார். அவர் ஞாயிற்றுக்கிழமை காலை  ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார்.
 இவர் இதற்கு முன்பு, கரூரில் கோட்டாட்சியர், காஞ்சிபுரத்தில் சுனாமி நிவாரண மறுவாழ்வு துணை ஆட்சியர், திருப்பூரில் கோட்டாட்சியர், திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் மேலாளர், ஊட்டியில் நிலவரி திட்ட அலுவலர், கோவையில் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர், ஊட்டியில் மாவட்ட வருவாய் அலுவலர், தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் நல அலுவலக பொது மேலாளர் ஆகிய பதவிகளை வகித்தவர். 
கடந்த 2002-ஆம் ஆண்டு விருதுநகரில் துணை ஆட்சியராக (பயிற்சி) சேர்ந்தார். மாவட்ட ஆட்சியராக முதன் முதலாக திருவாரூரில் பொறுப்பேற்றுள்ளார்.
 பின்னர் செய்தியாளர்களிடம்  பேசுகையில், இந்த மாவட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளதால்  இத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
தவிர மாவட்டம் வேளாண் சார்ந்த பூமியென்பதால் வேளாண் துறையை  மேம்படுத்தவும், அரசின் அனைத்துத் திட்டங்களும் மக்களைச் சென்றடையும் வகையில் பணியாற்றுவேன் என்றார் அவர்.

No comments:

Post a Comment