திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வில் இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் என 5,451 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இத்தேர்வுக்கு இணையவழி மூலம் செப். 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நவ. 6-ஆம் தேதி தேர்வு நடைபெறவுள்ளது.
தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் செப். 2-ஆம் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது. பயிற்சியின் போது இலவசமாக பாடக் குறிப்புகள் முந்தைய ஆண்டு மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்படும். மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படுகிறது.
பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, தேர்வுக்கு விண்ணப்பித்த நகலுடன் செப். 2-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வந்து பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment