வங்கி அலுவலர் பணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது என வேலைவாய்ப்பு அலுவலர் செல்லதுரை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுப்பணித்துறை வங்கிகளில் அலுவலர் பணிகளுக்கான பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு மூலம் 8,922 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 1.7.2016 தேதிப்படி 20 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். தேர்வெழுத ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இத்தேர்வை சிறப்பாக எழுத உதவும் வகையில் திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் மையத்தின் மூலம் ஆக.16 முதல் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மட்டும் பங்கேற்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்த கம்ப்யூட்டர் ஜெராக்ஸ், வேலைவாய்ப்பு அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு ஆக.16-ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு வந்து பதிவு செய்து பயன்பெறலாம்
No comments:
Post a Comment