திருவாரூர் மாவட்டத்தில் ஆகஸ்ட்
13-ஆம் தேதி பொதுவிநியோகத் திட்ட குடிமைப் பொருள் குறைதீர் கூட்டம்
நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூர் மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில்
திருவாரூர் வட்டம் வேலங்குடியில் திருவாரூர் கோட்டாட்சியர், நன்னிலம்
வட்டம் நீலக்குடியில் திருவாரூர் கூட்டுறவு சங்க துணைப் பதிவாளர், குடவாசல்
வட்டம் அத்திச்சோழமங்கலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை
மண்டல மேலாளர், வலங்கைமான் வட்டம் பாப்பாக்குடியில் கூட்டுறவு சங்கங்களின்
இணைப் பதிவாளர், நீடாமங்கலம் வட்டம் செட்டிச்சத்திரத்தில் மாவட்ட வழங்கல்
அலுவலர், மன்னார்குடி வட்டம் கட்டக்குடியில் மன்னார்குடி கோட்டாட்சியர்,
திருத்துறைப்பூண்டி வட்டம் காசடிக்கொல்லையில் மன்னார்குடி கூட்டுறவு சங்க
துணைப் பதிவாளர் ஆகியோர் தலைமையில் பொதுவிநியோகத்திட்ட குறைதீர் கூட்டம்
அந்தந்த இடங்களில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் பொதுவிநியோகத்திட்ட
அங்காடிகளின் செயல்பாடுகள் குறித்தும் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல்,
நீக்கல், திருத்தம் போன்றவைகள் குறித்தும், கடைமாற்றம், முகவரி மாற்றம்
போன்றவை குறித்து தங்களது கோரிக்கையை மனுவாக அளித்து பயன்பெறலாம்.
No comments:
Post a Comment