சுதந்திர தின விழாவையொட்டி மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கூட்டத்தில் ஊராட்சி மற்றும் பொது விநியோகத்திட்ட ஆவணங்கள் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். தவிர ஜனவரி 2016 முதல் ஜூலை 2016 வரையுள்ள காலத்தில் ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட குடிநீர்,
மின்சாரம் மூலதனப்பணிகள், நிர்வாகம் மீதான செலவினங்கள் மற்றும் பணிகளின் முன்னேற்றம் படித்துக் காண்பிக்கப்படும். 2016-17 ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்படவிருக்கும் ஊராட்சி வளர்ச்சிப் பணிகளுக்கான திட்ட அறிக்கை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்படும். இதுதவிர ஊராட்சியின் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு உள்ளிட்ட சுகாதாரம் குறித்து பேசி முடிவெடுக்கப்படும். எனவே, கூட்டத்தில் பங்கேற்று நிறைகுறைகளைத் தெரிவித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றார்.
No comments:
Post a Comment