Tuesday, 2 August 2016

ரியோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் இளம் வீராங்கனை யார்?

நேபாளத்தை கடந்த 2015 ஏப்ரல் மாதத்தின்போது பயங்கர நிலநடுக்கம் உலுக்கியது. ரிக்டர் அளவுகோலில் 7.9 புள்ளிகளாகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டில் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்துபோனார்கள்.
நேபாளத்தைச் சேர்ந்த 13 வயது நீச்சல் வீராங்கனை கெளரிகா சிங், ரியோ ஒலிம்பிக் போட்டியின் இளம் வீரர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.
நேபாளத்தில் பிறந்த கெளரிகா சிங், 2 வயதில் லண்டனுக்குச் சென்றார். கடந்த வருடம் ஏப்ரல் மாதம், நேபாளத்தில் நடந்த நீச்சல் போட்டியில் கலந்துகொள்வதற்காக அந்த நாட்டுக்குச் சென்றிருந்தபோது கெளரிகா சிங்கும் நிலநடுக்கத்தால் உண்டான சிக்கல்களை அனுபவித்தார்.
அது மிகவும் பயங்கரமான அனுபவம். நாங்கள் காத்மாண்டுவில் உள்ள ஒரு கட்டடத்தில் 5-வது மாடியில் இருந்தோம். அதனால் நிலநடுக்கம் ஏற்பட்டபோது எங்களால் தப்பிக்கமுடியவில்லை. ஒரு மேஜையின் கீழே 10 நிமிடம் பாதுகாப்பாக இருந்தோம். நிலநடுக்கம் முடிந்தபிறகு கீழே சென்றோம் என்று அந்த நிமிடங்களை விவரிக்கிறார் கெளரிகா சிங். 
மகளிர் 100 மீ. பேக்ஸ்டிரோக் போட்டியில் இவர் கலந்துகொள்கிறார்.

No comments:

Post a Comment