Friday, 5 August 2016

நகராட்சி குப்பைக் கிடங்கில் லாரி எரிந்து நாசம்

திருவாரூர் நகராட்சி குப்பைக் கிடங்கில் குப்பை கொட்டச் சென்ற நகராட்சி லாரி தீப்பிடித்து எரிந்து நாசமானது.
 திருவாரூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள் மூலம், நெய்விளக்குத்தோப்புப் பகுதியில் உள்ள நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது. வியாழக்கிழமை நகரில் குப்பைகளை அள்ளிக்கொண்டு நகராட்சிக்குச் சொந்தமான லாரி குப்பைக் கிடங்குக்குள் சென்றது.
அப்போது குப்பைக் கிடங்கு தீயினால் புகைமூட்டத்துடன் காணப்பட்டது.
  அப்போது குப்பை லாரி ஓட்டுநர் செல்வகணபதி மற்றும் உதவியாளர் லாரியில் உள்ள குப்பையைக் கொட்டுவதற்காக ஏற்கெனவே குப்பைகள் இருந்த பகுதிக்குச் சென்றனர். குப்பைகளைக் கொட்டிக்கொண்டிருக்கும்போது அதில் எரிந்துகொண்டிருந்த தீ காற்றில் தீவிரமடைந்து லாரியில் இருந்த குப்பைகள் மீது பரவியது. 
இதையடுத்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.  தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் லாரி முழுவதும் எரிந்தது. குப்பையில் எரியும் தீயை தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வருகின்றனர். இதுகுறித்து திருவாரூர் நகர போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment