சென்னையில் பிரபலமான முஸ்லிம் மதகுரு சையது முஹம்மது உமர் ஆமிர் கலீமி உடல்நலக் குறை வால் மரணமடைந்தார். அவரது இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
சையத் முஹம்மது உமர் ஆமிர் கலீமிஷாஹ் நூரி என்ற முஸ்லிம் மத குரு நேற்று முன் தினம் காலையில், உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இவருக்கு வயது 87. சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த இவர், தமிழகத்தின் வட மாவட்டங்கள், ஆந்திரா மற்றும் கர்நாடகா முஸ்லிம்களிடம் பிரபலமானவர்.
இவர் சென்னை ஐஸ் அவுஸ், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, பெரும்புதூர் மற்றும் சுங்குவார் சத்திரம் உள்ளிட்ட இடங்களில், அரபிக் மதரசா கல்வி நிலையங்கள் நடத்தி வருகிறார். சென்னையில் நூரிகா தரிகா என்ற ஆன்மீக மையத்தின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.
இவரிடம் ஏராளமான இளைஞர்கள் அரபிக் கல்வி கற்று, மதகுருவாகியுள்ளனர்.
மதகுரு ஆமிர் கலீமிஷாஹ், இஸ்லாமிய மதத்தை பரப்பிய மதகுரு முகைதீன் ஜிலானியின் 37வது பேரர் ஆவார் என, அவரைப் பின்பற்றும் முஸ்லிம் கள் தெரிவித்தனர். இவர் சென்னை யில் முகம்மது நபியின் பிறந்த நாளையொட்டி நடக்கும் மிலாது நபி ஊர்வலத்தை முதன் முதலில் தொடங்கி நடத்தி வைத்தவர் ஆவார்.
இவரது உடல் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அவரது இல்லத்திலிருந்து, பெரும்புதூர் அருகிலுள்ள சுங்குவார் சத்திரம் பன்னூர் ஆமிர் கலினி அரபிக் கல்லூரி வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரது இறுதி ஊர்வலத் தில் பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment