காவிரியின் குறுக்கே மேகதாது அணைகள் கர்நாடக அரசு கட்ட முயற்சித்து வருகிறது. இதனை கண்டித்து தஞ்சை , நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று ( சனிக்கிழமை) பந்த் நடக்கிறது. இந்த பந்த் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 3 மாவட்டங்களிலும் மழை பெய்வதையும் பொருட்படுத்தாமல் விசாயிகள் போராட்டக்களத்தில் நிற்பதை பார்க்க முடிகிறது. போராட்டம் காரணமாக இந்த பகுதியில் அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. நகர் முழுவதும் கர்நாடக எதிர்ப்பு போஸ்டர் காண முடிகிறது. ஆங்காங்கே சாலை மற்றும் ரயில் மறியல் நடந்து வருகிறது. அரசு அலுவலகம் மட்டும் இயங்கி வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் பந்த்துக்கு முழு ஆதரவு கிடைத்துள்ளது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், நீடாமங்கலம், குடவாசல், வலங்கைமான் பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. தெருக்கள் வெறிச்சோடி கிடக்கிறது. தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
No comments:
Post a Comment